ஹைதராபாத்: கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேர்கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவர தகவல்களை ஒன்றிய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், “நாட்டில் 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 ஆக உள்ளது. பாதிப்பு 42 ஆயிரத்து 766 ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்து 254 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் இதுவரை 2 கோடியே 99 லட்சத்து 358 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுக்க 37 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 268 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி 42 கோடியே 90 லட்சத்து 41 ஆயிரத்து 970 பேருக்கு கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று (ஜூலை 9) மட்டும் 19 லட்சத்து 55 ஆயிரத்து 225 சோதனைகள் நடத்தப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிகா வைரஸ்பாதிப்புகள் வேறு பயமுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை - சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை