இந்தியாவில் நேற்று (ஜூன்.29) 45 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (ஜூன் 29) மட்டும் ஒரேநாளில் 60 ஆயிரத்து 729 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 27 ஆயிரத்து 330ஆக உள்ளது.சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.