இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 471 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 726 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 31ஆக உயர்ந்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உள்ளது. தற்போதுவரை ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.