இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 88 லட்சத்து ஒன்பதாயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 677 பேர் கரோனா தொற்றால் பலியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது.