இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 3) ஒரேநாளில் 24 ஆயிரத்து 405 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். அடுத்தப்படியாக கேரளா மாநிலம் உள்ளது. அங்கு, 18 ஆயிரத்து 853 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.