தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் புதிதாக 26 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26ஆயிரத்து 115 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

India COVID-19 tracker  India COVID-19 state-wise report  India COVID-19 data  India coronavirus count  India COVID-19 vaccination  India COVID statistics  கரோனா  கரோனா தொற்று  கரோனா பரவல்  கரோனா நிலவரம்  இந்தியாவில் கரோனா பாதிப்புகள்  இந்திய கரோனா எண்ணிக்கை  india count  india corona count
கரோனா

By

Published : Sep 21, 2021, 3:12 PM IST

டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26 ஆயிரத்து 115 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 04 ஆயிரத்து 534ஆக உள்ளது.

மேலும் 34ஆயிரத்து 469 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27லட்சத்து 49ஆயிரத்து 574ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.75 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 252 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 45ஆயிரத்து 385ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கரோனா தொற்றுக்காக 34ஆயிரத்து 469 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 3 கோடியே 27 லட்சத்து 49ஆயிரத்து 574 ஆகும்.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 81 கோடியே 85 லட்சத்து 13 ஆயிரத்து 827 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 20 வரை மொத்தம் 55 கோடியே 50லட்சத்து 35 ஆயிரத்து 717 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (ஜூலை 20) ஒரே நாளில் 14 லட்சத்து 13ஆயிரத்து 951 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details