ஹைதராபாத் : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவர தகவலை ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதில், “கரோனா வைரஸிற்கு புதிதாக 41 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 593 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 23 ஆயிரத்து 810 ஆக உள்ளது.
தற்போதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். நாடு முழுக்க 46 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 479 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள தகவலின்படி 46 கோடியே 64 லட்சத்து 27 ஆயிரத்து 38 பேரின் சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று (ஜூலை 30) மட்டும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 315 பேரின் சளி மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு