புது டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 342 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 062 ஆக உயர்ந்துள்ளது.
38 ஆயிரத்து 704 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 79 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 483 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 470ஆக உயர்ந்துள்ளது.