டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 154 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (ஜூலை 11) ஒரே நாளில் 39 ஆயிரத்து 649 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 ஆயிரத்து 713ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 724 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.