தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 643 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 757ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 159 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 464 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 26 ஆயிரத்து 595ஆக அதிகரித்துள்ளது.