ஹைதராபாத்: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41ஆயிரத்து 831 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19: குணமடைந்தவர்களை தாண்டி, 41,831 பேர் தொற்றால் பாதிப்பு - இந்தியா கரோனா பாதிப்பு
கரோனா மூன்றாம் அலை வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

India COVID 19 tracker
மேலும், 541 பேர் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 351 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4 லட்சத்து 24 ஆயிரத்து 351 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 60 லட்சத்து 15 ஆயிரத்து 842 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 47 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரத்து 596 தடுப்பூசி டோஸ்கள் பயனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.