இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 510 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து943 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். நீண்ட நாள்களாக கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு, 27 ஆயிரத்து936 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.