புது டெல்லி : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை (ஏப்.7) காலை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,033 பேர் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், “நாடு முழுக்க கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கரோனா பரவல் விகிதம் 0.03 ஆக உள்ளது.
நேற்று மட்டும் 1,222 பேர் சிகிச்சைக்கு பின்னர் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஆக கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 98 ஆயிரத்து 789 ஆக இருந்தது.
அந்த வகையில் நாட்டில் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீளுவோர் விகிதம் 98.76 ஆகவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மட்டும் 4 லட்சத்து 82 ஆயிரத்து 039 பேருக்கு கோவிட் பெருந்தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 185.20 கரோனா டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு பாதிப்பு