டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,335 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(ஏப். 01) தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 52 பேர் உயிரிழந்தனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5 லட்சத்து,21 ஆயிரத்து 181 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,918 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 78.97 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.