டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் நேற்று (பிப். 25) ஒரே நாளில் 255 பேர் கரோனவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் மொத்தமாக ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 881 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
23,598 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 1.01% ஆக உள்ளது. வாராந்திர தொற்று விகிதம் 1.36% ஆகும். இதுவரை தொற்று பாதிக்கப்பட்டதிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.52% ஆக உள்ளது.