டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை மிகவும் குறைந்துள்ளது. இன்று (பிப்ரவரி 24) மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 148 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 302 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 4,28,81,179 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக பதிவாகியுள்ள கரோனா உயிரிழப்புகளில் 188 பேர் கேரளாவில் உயிரிழந்தவர்கள். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.46% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,009 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 55 லட்சத்து 147 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.