டெல்லி: மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 920 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.07% ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வரை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.12% ஆக உள்ளது.