தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா நிலவரம்- 30,757 பேர் பாதிப்பு

இந்தியாவில் நேற்று (பிப்ரவரி 16) ஒரே நாளில் 30,757 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கரோனவால் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா நிலவரம்- 30,757 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கரோனா நிலவரம்- 30,757 பேர் பாதிக்கப்பட்டனர்.

By

Published : Feb 17, 2022, 12:54 PM IST

டெல்லி:மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேர் புதியதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 541 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 3 கோடியே 32 ஆயிரத்து 918 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தினசரி தொற்று விகிதம் 2.61% ஆகவும், வாராந்திர தொற்று விகிதம் 3.04% ஆகவும் உள்ளது. மத்திய அமைச்சகத்தின் தகவலின்படி இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் விகிதம் 98.03 ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் அதிகமான கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை 174.04 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று(பிப்ரவரி 16) ஒரே நாளில் 11 லட்சத்து 79 ஆயிரத்து 705 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: ஹிஜாபுக்கு மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details