தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய கரோனா நிலவரம்; இந்தியாவில் 27,409 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 27,409 பேர் கரோனவால் புதிததாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய கரோனா நிலவரம்; இந்தியாவில் 27,409 பேர் பாதிக்கப்பட்டனர்
இன்றைய கரோனா நிலவரம்; இந்தியாவில் 27,409 பேர் பாதிக்கப்பட்டனர்

By

Published : Feb 15, 2022, 1:45 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மிகக் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று (பிப்ரவரி 14) இந்தியா முழுவதும் 27 ஆயிரத்து 409 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 2.23% ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் வாராந்திர தொற்று விகிதம் 3.63% ஆகும். இதுவரை இந்தியா முழுவதும் 75.30 கோடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 347 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 173.43 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒமைக்ரான் தொற்று தொடக்கத்திலிருந்து அதிகரித்து வந்தது. கரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவியதையடுத்து பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து தொற்று மிகவும் குறைந்து தற்போது 30 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.

தினசரி நோய்த்தொற்று டிசம்பர் 21 அன்று 5,326 என உயரத் தொடங்கி தற்போது குறைந்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், "2021 டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் கோவிட் 19 தொற்றின் எழுச்சி காணப்பட்டது, இது ஒமைக்ரான் மாறுபாட்டால் ஆரம்பமானது" என்று கூறினார்.

இதையும் படிங்க:கோர்ப்வாக்ஸ் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி

ABOUT THE AUTHOR

...view details