இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 44 ஆயிரத்து 776 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
2 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை - corona virus
நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 599ஆக அதிகரித்துள்ளது.
கரோனா
நேற்று (மே.13) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 317ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 599ஆக உள்ளது.
தற்போது 37 லட்சத்து 4 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 17 கோடியே 92 லட்சத்து 98 ஆயிரத்து 584 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.