தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு... - கரோனா தொற்று

இந்தியாவில் நேற்று (ஜூலை 24) ஒரே நாளில் 39 ஆயிரத்து 972 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

india corona cases daily update  Daily corona cases update  corona cases update  corona update  corona count  india count  india corona count  கரோனா எண்ணிக்கை  இந்திய கரோனா எண்ணிக்கை  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jul 25, 2021, 11:01 AM IST

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 742 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901ஆக உள்ளது.

மேலும் 39ஆயிரத்து 972 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 138 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 551ஆக உயர்ந்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 43 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 864 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 59 பேர் மாயம்

ABOUT THE AUTHOR

...view details