கிர்கிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ருஸ்லான் கசாக்பேவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவர் கூட்டாக செய்தியாளரைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் குறித்து பேசிய அவர், " ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆப்கனில் நடைபெறும் செயல்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனித்துவருகிறோம்.
ஆப்கனில் ஸ்திரத்தன்மை கெட்டுப்போனால் அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பாதிக்கும். தற்போதைய ஆப்கன் அரசு ஐநா சபை வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படும் என எதிர்பார்க்கிறோம். இதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
மத்திய ஆசிய நாடுகளான கிரிகிஸ்தான், கஜகஸ்தான், அர்மேனியா ஆகியவற்றுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ஜெய்சங்கர். கிரிஸ்தான் பயணத்தை முடித்த பின் அடுத்தபடியாக கஜகஸ்தான் செல்லவுள்ளார்.
இதையும் படிங்க:அதிருப்தியுடன் நிறைவடைந்த இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை