தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Asian Games 2023: இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தங்கம் வென்றது! உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்! - ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியாதங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி தங்கம் வென்றது. மேலும் சீனாவின் உலக சாதனையை முறியடித்து இந்திய குழு புது உலக சாதனை படைத்தது.

Asian Games
Asian Games

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 8:23 AM IST

ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் ருத்ரான்க்‌ஷ் பாலாசாகேப் பாடீல், திவ்யான்ஷ் சிங் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ஆயிரத்து 893 புள்ளி 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும், இந்திய அணி பழைய உலக சாதனையை முறியடித்து புது உலக சாதனையை படைத்தனர்.

இதற்கு முன் சீனா உலக சாதனை படைத்து இருந்தது. அதை 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று புது வரலாறு படைத்து உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பாகு உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர்கள் இந்த உலக சாதனையை படைத்து இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை இந்திய வீரர்கள் ருத்ரான்க்‌ஷ் பாலாசாகேப் பாடீல், திவ்யான்ஷ் சிங் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details