டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியிலிருந்து இந்திய மற்றும் சீனாவின் துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பான முக்கிய தகவல்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், “இரு நாட்டு (சீனா-இந்தியா) தனது துருப்புகளை பகுதி பகுதியாக வெளியேறும் ஒப்பந்தம் உள்ளது. சீன ராணுவம் வெளியேறுவதாக உறுதியளித்துள்ளது. சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறினால் மட்டுமே, இந்தியப் படைகள் விலக்கிக்கொள்ளப்படும்” என்றார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “சீன இராணுவத்தின் அத்துமீறிய செயலால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. லடாக்கில் எத்தனை சோதனைகள் நிகழ்ந்தாலும் அதனை சந்திக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளது.