தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லை சச்சரவு- இந்தியா சீனா மீண்டும் பேச்சுவார்த்தை! - எல்லை

இந்தியா சீனா இடையே எல்லை சச்சரவு தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்கியது.

border dispute
border dispute

By

Published : Jul 31, 2021, 2:15 PM IST

டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான 12ஆவது சுற்று உயர்மட்ட தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை சனிக்கிழமை லடாக் பகுதியில் உள்ள மோல்டோவில் நடந்து வருகிறது.

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் 900 சதுர கிமீ டெப்சாங் சமவெளிகள் போன்ற பகுதிகளில் இந்திய இராணுவப் பிரதிநிதிகள் விலகுவது பற்றி விவாதிக்கின்றனர்.

இந்தியத் தூதுக்குழுவிற்கு லே-வைச் சேர்ந்த XIV படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (கிழக்கு ஆசியா), நவீன் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகிக்கின்றனர்.

சீனா தரப்பில் இம்மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட ராணுவத்தின் மேற்கு கட்டளை தளபதி சூ குய்லிங் தலைமை தாங்குகிறார். முன்னதாக, ஏப்ரலில் நடைபெற்ற 11ஆவது சுற்று பேச்சுவார்த்தையின் போது, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் டெப்சாங் ஆகியவற்றில் மீது கவனம் செலுத்தவில்லை.

சீனா தனது கட்டுப்பாட்டு கோடு முழுவதும் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. அதைப் பார்க்கும்போது,​​இந்தியா சீனாவை நோக்கிய தனது பார்வையை மாற்றியுள்ளது.

சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க அதன் முந்தைய தற்காப்பு அணுகுமுறையைப் போலல்லாமல், இந்தியா இப்போது இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

அதற்கேற்ப இராணுவத்தையும் மறுசீரமைத்துள்ளது. சீனாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையை மையமாகக் கொண்டு இந்தியா 50,000 வீரர்களை நிறுத்தியுள்ளது.

திபெத்திய பீடபூமியில் சீனா தற்போதுள்ள வான்வெளிகளை புதுப்பிக்கும் போது, ​இரட்டை என்ஜின்கள் கொண்ட போர் விமானங்களை நிலைநிறுத்த அனுமதிக்கும்.

அதுமட்டுமின்றி கூடுதலாக, சீனா திபெத் இராணுவப் பகுதியிலிருந்து தெற்கு உத்தரகண்ட் கீழே உள்ள கரகோரம் வரம்பைக் கடந்து செல்லும் சின்ஜியாங் பகுதிக்கு துருப்புக்களையும் கொண்டு வந்துள்ளது.

மேலும், அவர்கள் அதிக எண்ணிக்கையிலான நீண்ட தூர பீரங்கிகளை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்

ABOUT THE AUTHOR

...view details