தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எந்த முன்னேற்றமும் இன்றி நிறைவு பெற்ற இந்தியா-சீனா பேச்சுவார்த்தை! - இந்திய-சீன பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா-சீனா ராணுவ பிரதிநிதிகளுக்கு இடையே இன்று (நவம்பர் 8) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

india-china
india-china

By

Published : Nov 8, 2020, 3:51 PM IST

கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, எல்லைப் பிரச்னையைத் தீர்க்கும்விதமாக இருநாட்டு ராணுவப் பிரதிநிதிகளுக்குமிடையே எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது.

ராணுவ உயர் மட்ட அலுவலர் பிஜிகே மேனன் தலைமையில் இந்தியப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிழக்கு லடாக்கில் சுசுல் கிராமத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்தது. இருப்பினும், அமைதியான வழியில் தீர்வுகாண தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் பிரச்னைகளை தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் மேற்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இரு நாடுகளும் மேற்கொண்டன.

இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் தலைவர்கள் எட்டிய தீர்வினை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். விரைவாகவே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியிலேயே நிலை நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details