தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா இடையே விரைவில் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் இருநாட்டு படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்து இந்தியா - சீனா இடையேயான ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

By

Published : Jan 7, 2021, 10:35 PM IST

கிழக்கு லடாக்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதனிடையே, படைகளை விலக்கிக்கொள்வது குறித்து பேசுவதற்கான தேதியை முடிவு செய்வதில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவு, இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. இது குறித்து பெயரை குறிப்பிடாமல் உயர்மட்ட அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைக்கான தேதியை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தோம். ஆனால், சீன தரப்பு வேறொரு தேதியை முன்வைக்கிறது. பல்வேறு காரணங்களால் அத்தேதியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை தேதியை முடிவு செய்ய ஒத்து கருத்து ஏற்படவில்லை" என்றார்.

குளிர்காலம் முடியும் வரை, எதுவும் நடைபெறாது என அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்துகிறது. வானிலை, சவால் மிக்க நிலப்பரப்பு ஆகிய காரணங்களால் இரு தரப்பாலும் இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் படைகளை குவிக்க முடியாது. எனவே, உயரமான நிலபரப்பு பகுதிகளில் குவிக்கப்பட்ட ஆயுதங்களையும் ராணுவ வீரர்களையும் முன்பு நிலை நிறுத்தப்பட்ட பகுதிகளில் திரும்பப்பெற்றுக்கொள்வது என்பது மிகக் கடினமான செயலாகும்.

ஜூன் 6, 22, 30, ஜூலை 14, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 21, அக்டோபர் 12, நவம்பர் 6ஆகிய தேதிகளில் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details