தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிபயங்கர சைபர் க்ரைம் ஆயுதம் பெகாசஸ்- அமெரிக்க பத்திரிகை பகீர்! - பெகாசஸ் குறித்து நியூயார்க் டைம்ஸ்

உலகின் அதிபயங்கர சைபர் க்ரைம் பெகாசஸ் என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

Pegasus
Pegasus

By

Published : Jan 29, 2022, 10:19 PM IST

நியூயார்க் : 2017 ஆம் ஆண்டு இந்தியா-இஸ்ரேல் இடையே 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளதை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் இதற்கு மையப் பொருளாக பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்க சில அரசாங்கங்கள் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தி நியூயார்க் டைம்ஸ் (NYT), The Battle for the World's Most Powerful Cyberweapon' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமம் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக (10 ஆண்டுகள்) அதன் கண்காணிப்பு மென்பொருளை உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு சந்தா அடிப்படையில் விற்பனை செய்து வருவதாகக் கூறியுள்ளது.

இதை வேறு யாராலும் அல்ல, ஒரு மாநில புலனாய்வு நிறுவனத்தால் கூட செய்ய முடியாது. இது ஸ்மார்ட்போனில் மறைந்திருந்து தகவல்களை எளிதாக திருடும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றதையும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இஸ்ரேல்-இந்திய உறவு மூடுபனி போல் காணப்பட்டது. பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிரான கண்ணோட்டத்தில் பயணித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்னர் இந்தியா- இஸ்ரேல் உறவு புதிய அத்தியாயத்தை பெற்றது. 2017இல் இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடியும், அப்போதைய அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் வெறுங்காலுடன் நடந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : 'பெகாசஸ்' இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details