டெல்லி: இந்தியாவில் இருந்து உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்றுமதி கொள்கையில் "இலவசம்" என்பதில் இருந்து "தடைசெய்யப்பட்டது" என்று திருத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் காரி பருவத்தில் நெல் கொள்முதல் குறைந்துள்ளதால், அரிசி உற்பத்தி பாதிப்படைந்தது. இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்துள்ளது.
உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை... மத்திய அரசு அதிரடி... - அரிசி ஏற்றுமதிக்கு வரி
இந்தியாவில் இருந்து உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
உடைந்த அரிசி
இந்த நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ரு மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு நடப்பாண்டில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்ததும், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.