நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாடு அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றின் பாதையில் செல்ல இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
நேபாளத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியா - கே பி சர்மா
டெல்லி: நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், "நேபாளத்தில் சமீபத்தில் அரங்கேறிய அரசியல் நிகழ்வு குறித்து இந்தியா கருத்தில் கொண்டுள்ளது. இவை அனைத்து அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள், ஜனநாயக ரீதியாக முடிவெடுக்க வேண்டும். அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்" என்றார்.
நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் கே.பி. சர்மா பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, இந்த முடிவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா இக்கருத்தை தெரிவித்துள்ளது.