தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜப்பானுடன் இணைந்து விமானப்படையை வலுப்படுத்தும் இந்தியா... - இந்தியா பேச்சுவார்த்தை

டெல்லி: சீனாவுடன் எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், ஜப்பானுடன் இணைந்து விமானப்படையை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தளபதி
தளபதி

By

Published : Dec 11, 2020, 12:51 AM IST

அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் விமானப்படை தளபதி இசுட்சு ஷன்சி, டெல்லியில் இந்தியப் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஆர்.கே.எஸ். பதாரியை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு விமானப்படை தலைவர்களும், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறித்தும், விமானப் படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இருநாட்டு விமான படையினரும் கூட்டாக பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அடுத்ததாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஆகியோரை ஜப்பான விமானப்படை தளபதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details