டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,858 பேர் கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனா தொற்றால் 11 உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக நாட்டில் கரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 508 கரோனா பாதிப்பாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், தினசரி தொற்று விகிதம் 0.59 சதவீதமும், வாராந்திர தொற்று விகிதம் 0.66 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை பதிவான 5 லட்சத்து 24 ஆயிரத்து 201 இறப்புகளில், மகாராஷ்டிராவில் 1,47,853 பேர், கேரளாவில் 69,355 பேர், கர்நாடகாவில் 40,105 பேர், தமிழ்நாட்டில் 38,025 பேர், டெல்லியில் 26,188 பேர், உத்தரப் பிரதேசத்தில் 23,513 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் 21,203 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை: 38 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!