ஜம்மு காஷ்மீர் : பரமுல்லா மாவட்டத்தில் கோஷ்புக் பட்டானில் பஞ்சாயத்து தலைவர்(சர்பஞ்ச்) மன்சூர் அஹமத் பாங்ரூ இரவு 7:35 அளவில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் சுடப்பட்டவர் சுயேச்சை பஞ்சாயத்து தலைவர் மன்சூர் அஹமத் பாங்ரூ என்பதும்; அவர் துப்பாக்கி குண்டால் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.