புதுச்சேரி: சுயேச்சை வேட்பாளர்கள் இருவரின் வாகனங்கள் இருவேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு ஒரு கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி திருபுவனை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், சுயேட்சை வேட்பாளருமான அங்காளன் காரை உடைத்ததாக என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கோபிகா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: சுயேச்சை வேட்பாளர்கள் வாகனங்கள் மீது தாக்குதல் - சுயேச்சை வேட்பாளர்கள்
புதுச்சேரி திருபுவனை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், சுயேட்சை வேட்பாளருமான அங்காளன் காரை உடைத்ததாக என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கோபிகா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Independent candidate's car damaged in puducherry
இதேபோல் உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சிவசங்கரன் காரை அத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.