தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

IND Vs WI: முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND Vs WI: முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IND Vs WI: முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

By

Published : Jul 27, 2023, 11:09 PM IST

Updated : Jul 28, 2023, 9:56 AM IST

பர்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்படோஸ் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா அணியில் வேகப்ந்து வீச்சாளர் முகேஷ் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் 2 ரன்களிலும், அதன் பின் வந்த அலிக் அதனாஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுடனும், பிராண்டன் கிங் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மியர் 11 ரன்னில் ஜடேஜாவிடம் போல்ட் ஆனார். கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் சுழற்பந்தில் வீழ்ந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தன. இந்தியா பந்துவீச்சு சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி, 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மன் கில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும், தாக்குர் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். மறுபக்கம் இஷான் கிஷன் அரை சதம் கடந்து 52 ரன்களில் கேச் ஆனார்.

இந்தியா 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்கள், ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் குடாகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும், ஜேயடன் சீல்ஸ் மற்றும் யானிக் காரியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையும் படிங்க:தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் சென்னை சிறுவன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!

Last Updated : Jul 28, 2023, 9:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details