தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு கடலோர பகுதியில் மழை அதிகரிக்க வாய்ப்பு - மழை

மேற்கு கடலோரப் பகுதியில், ஜூலை 9ஆம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மழை
rain

By

Published : Jul 6, 2021, 8:55 PM IST

டெல்லி:அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9ஆம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொங்கன், கோவா, கர்நாடகா, கேரளா, மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9ஆம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் தீவிர கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், தென்மேற்கு பருவமழை மீண்டும் ஏற்படுவதால் வடகிழக்கு பகுதியான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களில் ஜூலை 9ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதத்துடன் கூடிய காற்று, ஜூலை 8ஆம் தேதியிலிருந்து கிழக்கு இந்தியாவுக்கு படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளது.

இது ஜூலை 10ஆம் தேதிக்குள் பஞ்சாப், வடக்கு ஹரியானாவுக்குப் பரவ வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ காற்று மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லிக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, மத்திய இந்தியா பகுதியில் மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில், ஒரு சில இடங்களில் ஜூலை 8ஆம் தேதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட மேற்கு இந்தியாவில் ஜூலை 9ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். உத்தராகாண்ட்டில் 8ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 9ஆம் தேதியில் இருந்தும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூலை 10ஆம் தேதியில் இருந்தும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே:மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழை

ABOUT THE AUTHOR

...view details