பெங்களூரு: வயிற்றுப் பிழைப்பிற்காக பிச்சை எடுத்து வந்த பழக்கம் தற்போது பெருகி ஓர் மாஃபியாவாக வளர்ந்துள்ளது. இப்படி பிச்சை எடுப்பதன் மூலம் குற்றச்செயல் செய்ய உதவிய குழந்தைகள், பெண்கள் உட்பட 31 பேரை கர்நாடகாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிச்சையெடுக்கும் பல பேர் தங்கள் குழந்தையல்லாத வேறு குழந்தைகளை தூக்கிச்சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மற்றும் ஏனைய பிற வட இந்திய மாநிலங்களிலிருந்து பிச்சை எடுப்பதை ஓர் பெரும் வியாபாரமாக செய்து வருகின்றனர், சில மாஃபியா கும்பல்.
இதுகுறித்து கர்நாடக காவல் துறையினரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வேறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்த 10 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தக் குழந்தைகள் வேறொரு பகுதியிலிருந்து விலைக்கு வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டு வரவழைத்து, இது போன்ற பிச்சை எடுக்கும் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பிச்சை எடுக்கும்போது குழந்தைகள் அழுகாமல் இருக்க பச்சிளம் குழந்தைகளுக்கு மதுவளித்து தூங்கவைக்கும் குரூரச் செயலும் நடந்தேறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் குற்றச்செயலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் பார்வையில் விசாரணை செய்யப்பட்டனர். மேலும், இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட மொத்தக் குற்றவாளிகள் மீதும் இறுதிகட்ட விசாரணைக்குப்பிறகு, வழக்கு பதியவிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பிச்சை எடுப்பவர்கள் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு DNA பரிசோதனை எடுக்கவிருப்பதாகவும் கூறியுள்ளனர். ஏற்கெனவே, கர்நாடக மாநிலத்தில் பிச்சை எடுப்பதற்குத் தடை(Beggery prohibition act) சட்டம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமலுக்கு வராமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்செயலில் அப்பாவி மக்களை ஈடுபடுத்தும் ஏஜென்ட்கள் பிகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து சினிமாவில் வருவது போல் வேலை வாங்கித் தருவதாக பாசாங்கு காட்டி, இது போன்ற செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். ஏழைக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளையும் விலைக்கு வாங்கி, இந்தச் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லவ் மேரேஜ் செய்த பெண்ணுக்கு மொட்டை.. பெற்றோரின் கொடூர செயல்!agents hand over the children to women and get commission then escaped.