தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழுமையான தாக்கல்! - coronavirus second wave

புதுச்சேரி: கரோனா அதிகரிப்பு காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : May 5, 2021, 6:54 PM IST

ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக, பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் வழக்கானது, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று (மே 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், ’3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் 82 டன் கிடைப்பதாகவும், தேவை என்பது 20 டன்னாக இருப்பதால் பற்றாக்குறை இல்லை’ என தெரிவித்தார்.

நீதிபதிகள் குறுக்கிட்டு, ”சென்னையைவிட சிறிய அளவிலான புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1200 பேர் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாவது அபாயகரமானது” என தெரிவித்தனர். புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வெண்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

அதுபோல புதுச்சேரியில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், கரோனா பாதிப்பை இவை அதிகரிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ? அல்லது ஆதாரங்களோ? இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கும் நாளை (மே 6) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு பொய் கூறுகிறது' - ப.சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details