ஆந்திர பிரதேசம்:ஆளும் ஒய்சிபி கட்சி தலைவர்களின் வீடுகளில் ஐடி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னவரம் எம்எல்ஏ வல்லபனேனி வம்சி, விஜயவாடாவில் உள்ள தேவிநேனி அவினாஷ் ஆகியோர் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவினாஷ் வீட்டில் காலை 6.30 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நில பேரம் தொடர்பாக ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருவரின் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். வம்சீரம் பில்டர்ஸ் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ஹைதராபாத், விஜயவாடா, நெல்லூர் ஆகிய நகரங்களைத் தவிர, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் என 20ற்கும் மேற்பட்ட குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இன்றைய விவாதம்