தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டைனிக் பாஸ்கர் பத்திரிகை குழுமங்களில் வருமான வரி சோதனை! - நரேந்திர மோடி

டைனிக் பாஸ்கர் உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Dainik Bhaskar group
Dainik Bhaskar group

By

Published : Jul 22, 2021, 3:23 PM IST

போபால்: வருமான வரித்துறை அலுவலர்கள் வியாழக்கிழமை (ஜூலை 22) இரண்டு முக்கிய பத்திரிகை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

இந்தச் சோதனையானது டைனிக் பாஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்த செயல்படும் பிரபல இந்தி சேனல் பாரத் சமாச்சார் ஆகிய நிறுவனங்களில் நடைபெற்றது.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி சோதனையின் போது ஊழியர்கள் உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும் அவர்களின் மொபைல் போன்களையும் அலுவலர்கள் பறித்துக் கொண்டனர் எனவும் சோதனையின்போது ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்றும் அலுவலர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனையானது போபால், ஜெய்ப்பூர், அகமதாபாத், நொய்டா உள்ளிட்ட அலுவலகங்களில் நடந்தது.

பத்திரிகை அலுவலகங்களில் நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங், “மோடி அரசாங்கம் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களை மிரட்டுகிறது. டைனிக் பாஸ்கர் பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் டஜன் கணக்கில் குவிந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “இது ஊடகத்தினரை பயமுறுத்த நடத்தப்பட்ட தாக்குதல்” எனக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர், “நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்ற செய்தியை இது தெளிவுப்படுத்துகிறது. இது மிக மிக ஆபத்தானது. அவர்கள் காப்பாற்றபட மாட்டார்கள். இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “ஊடகம் மீது மோடி அரசாங்கம் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது. விமர்சனத்தை மோடி அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களின் பாசிச முகம் ஜனநாயகத்துக்கு எதிரானது” எனத் தெரவித்துள்ளார்.

டைனிக் பாஸ்கர் பத்திரிகை இந்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு மாநிலங்களில் வெளிவருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details