போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பீடல் சட்டப்பேரவை உறுப்பினர் நிலேயா தேகா. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சொந்தக்காரரனா இவருக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்பிலான சொத்துகளை கையாளுவதற்கான ஆதாரங்கள் சிக்கின. மேலும், அவர் ஹவாலா பணத்தை நிர்வகிப்பதற்கான சில ஆதரங்களும் கிடைத்துள்ளன என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.450 கோடிக்கும் அதிகமான சொத்துகளை பணமாகவும், ஆவணங்களாகவும் அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். அவருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட 9 லாக்கர்கள், ரூ.8 கோடி பணம், ரூ.44 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் ஆகியவை குறித்த ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.