மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நகர்ப்புற கூட்டுறவு கடன் வங்கியின் தலைமையகம் மற்றும் கிளை ஒன்றில் வருமான வரித்துறையினர் அக்டோபர் 27 அன்று சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வங்கியின் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களில் ஒருவரின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.
கோர் பேங்கிங் சொல்யூஷன்ஸ் (சிபிஎஸ்) குறித்த வங்கித் தரவுகளின் ஆய்வு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட முக்கிய நபர்களின் வாக்குமூலங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
பான் எண் இல்லாமல் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் இந்த கிளையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகள் கேஒய்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொடங்கப்பட்டவை என்பதும், கணக்கு துவக்கப் படிவங்கள் அனைத்தும் வங்கி ஊழியர்களால் நிரப்பப்பட்டு, அவர்களின் கையொப்பம்/கட்டைவிரல் பதிவை இட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.