தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 20 தனி நபர்களுக்கு சொந்தமான, சென்னை, கோவை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.
பணப்பட்டுவாடா புகார்! - 20 இடங்களில் சோதனை! - வாக்காளர்கள்
தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் மாநிலம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
it raid
சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்தும், சோதனை செய்யப்படும் விவரங்களும் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை!