ஆந்திரா: ஆந்திராவில் உலகப் புகழ் பெற்ற வைணவ ஸ்தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நெருக்கடியால் மூடிய கோயில் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பக்தர்கள் காணிகையிடும் உண்டியலில் உள்ள பணத்தை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை எண்ணுவது வழக்கம். இந்நிலையில் தற்போது திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமிக்கு கடந்த திங்களன்று பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.