அகமதாபாத் (குஜராத்): விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது கால் இறுதியில் மகாராஷ்ட்ரா - உத்தரபிரதேச அணிகள் கோதாவில் இறங்கின.
டாஸ் இழந்து முதல் பேட்டிங் செய்த மராட்டிய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், உத்தரபிரதேச வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து நாலாபுறமும் சிதறவிட்டர்.
ருத்தரதாண்டவம் ஆடிய ருதுராஜ், ஆட்டத்தின் 49-வது ஓவரில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கு கொண்டு சென்றார். 49-வது ஓவரில் மற்றும் 43 ரனகளை சேகரித்த ருதுராஜ் ஒரு நோபால் உள்பட 7 சிக்சர்களை பறக்க விட்டு உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.