தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் அதிசயக் குடும்பம்! - birthday

கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அதிசயம் நடந்துள்ளது.

ஓரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும்  கேரளாவின் அதிசயக் குடும்பம்!
ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் அதிசயக் குடும்பம்!

By

Published : Jun 10, 2022, 10:54 PM IST

கேரளா:ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் இருக்க முடியுமா? முடியாது என நீங்கள் நினைத்தால் கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அனீஷ் குமாரின் குடும்பத்தைக் கண்டால், தங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

அனீஷ் குமார் மற்றும் அஜிதா தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆராத்யா என்ற மகளும் மற்றும் அக்னே என மகனுமாக குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். அதிசயமாக இந்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வருமே மே 25ஆம் தேதி பிறந்ததன் மூலம் ஒரே நாளில் பிறந்தநாளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இது குறித்து அனீஷ் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசும்பொழுது, ’என்னுடைய சொந்த ஊர் கண்ணூர் அருகில் உள்ள படியொட்டும்சல். எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஒரே நாள் பிறந்த நாள் எனத் தெரியவந்தபொழுது எனக்கும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பின்பு எங்களுடைய முதல் குழந்தை ஆராத்யா 2012ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுகுறித்து எந்த திட்டமும் தீட்டவில்லை. யதார்த்தமாக நடந்த ஒன்று அது.

ஆனால், உண்மையான இன்ப அதிர்ச்சியே 2019இல் என்னுடைய மகனும் மே 25இல் பிறந்தது தான். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த பெரிய பரிசாக கருதுகிறேன். நிறைய பேர் நாங்கள் திட்டமிட்டு ஒரே நாளில் குழந்தைப் பெற்றுக்கொண்டதாக நினைப்பார்கள். ஆனால் அப்படி எதுவுமில்லை. இது யதார்த்தமாக நடந்த ஒன்று' என்றார்.

அனீஷ் குடும்பத்தினர் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அனைவரின் பெயரும் ஒரே மாதியாக 'A' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தன்னை தானே திருணம் செய்து கொண்ட ஷாமா பிந்து!

ABOUT THE AUTHOR

...view details