தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2020, 4:39 PM IST

ETV Bharat / bharat

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசை கண்டித்து போராட்டம்!

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு வருகைதர பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் போடபட்டிருப்பதை கண்டித்து வர்த்தகர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசை கண்டித்து போராட்டம்!
திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசை கண்டித்து போராட்டம்!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தின் சனி பெயர்ச்சி விழா நாளை (டிச. 27) நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பித்து, 48 மணி நேரத்திற்குள் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று வந்தவர்கள் மட்டுமே ஆலயத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்க படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் இந்த உத்தரவிற்கு வர்த்தகர்கள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி திருநள்ளாறு சாலை வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட நிர்வாகம், ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பந்தல் அமைத்ததை காவல் துறையினர் அப்புறப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசை கண்டித்து போராட்டம்!

இதனிடையே காரைக்கால் மாவட்ட எல்லைகளில் 7 இடங்களில் சோதனை சாவடிகளில் கரோனா பரிசோதனை செய்யாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்படுவதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...‘ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்...அப்புறம் பாருங்க பதங்கங்கள் குவியும்’ இளம் வீரர்களின் குரலுக்கு செவி மடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details