விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிப்பது, ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) எனும் தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவர் பதவிக்காக, மூன்று விண்வெளி மையத்தின் இயக்குநர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு பிரமதர் அலுவலகத்துக்கு அனுப்பட்டுள்ளன.
இதில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எஸ். சோம்நாத், யு ஆர் ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநர் பி.குன்ஹிகிருஷ்ணன், ஐஐஎஸ்யூ இயக்குநர் ஷியாம் தயால் தேவ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
விரைவில் இன்-ஸ்பேஸின் தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்களை உறுப்பினராக கொண்டு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முக்கிய அமைப்பாக செயல்படும்.
இதையும் படிங்க:இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: இரு தேசிய நெடுஞ்சாலைகள், 227 முக்கிய சாலைகள் பனியால் மூடல்!