தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி - single day

புதுச்சேரியில் ஒரேநாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Apr 17, 2021, 3:52 PM IST

Updated : Apr 17, 2021, 4:00 PM IST

புதுச்சேரி: கரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 16) சுமார் 4,748 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், புதுச்சேரியில் 567 பேருக்கும், காரைக்கால் 88 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாகியில் 25 பேர் உள்பட 715 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தற்போது, மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகளில் 721 பேரு, வீடுகளில் 3369 பேரும் என மொத்தம் 4,090 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், நேற்று (ஏப்ரல் 16) புதுச்சேரி காரைக்காலில் சிகிச்சைப் பலனின்றி மூன்று பேர் இறந்துள்ளனர்.

மேலும், கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 42 ஆயிரத்து 313 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’கல்லூரியில் ஆங்கிலப் பாடகனாக அசத்திய விவேக்' - நினைவுகளைப் பகிர்ந்த ஓவியர்

Last Updated : Apr 17, 2021, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details