தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 20, 2021, 9:42 AM IST

ETV Bharat / bharat

காரைக்காலில் ரூ.10 லட்சம் சாராயம் பறிமுதல்!

புதுச்சேரி: காரைக்காலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சாராயம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்காலில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் சாராயம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்காலில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் சாராயம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காரைக்கால், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக சாராயம் சப்ளை செய்யப்படுவதாக தனிப்படை காவலர்களுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், கொன்னக்காவலி பகுதியில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடை ஒன்றிலிருந்து வாக்காளர்களுக்கு சாராயம் விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை அலுவலர்கள் கடையை முழுமையாக சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, கணக்கில் வராத சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள, 20 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 650 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு, 3 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக கடைக்கு சீல் வைத்த கோட்டுச்சேரி காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து மேலாளரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'கார் இல்லை கார வீடு இல்லை கையிருப்பிலும் காசு இல்லை' - மக்கள் வேட்பாளராய் களமிறங்கும் மாரிமுத்து

ABOUT THE AUTHOR

...view details